siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

இரு இந்திய மாணவர்கள் ஸ்காட்லாந்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு


ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். 

அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவர்கள் மறைவு குறித்த தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

மாணவர்களின் மறைவுக்கு தூதரகம் தரப்பிலும், பல்கலைக்கழகம் தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இன்று பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது   



வியாழன், 18 ஏப்ரல், 2024

மரண அறிவித்தல் திரு செல்லையா திருஞானசம்பந்தன் (சம்பந்தன்)

துயர் பகிர்வு-- உதிர்வு -17-04-2024
யாழ் தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் ஒன்றாரியோவை வதிவிடமாகவும் கொண்ட  திரு செல்லையா திருஞானசம்பந்தன் (சம்பந்தன்)அவர்கள் .17-04-2024.புதன் கிழமை அன்று  Markham Ontario வில்  இறைவனடி சேந்தார். 
 அன்னாரின் ஈமக்கிரியை பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில்
                                                பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


புதன், 17 ஏப்ரல், 2024

வவுனியாவில் குழந்தை மீது கத்தி வைத்து பயமுறுத்தி நகைகள் மோட்டார் சைக்கி ல் வழிப்பறி

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் 
சென்றுள்ளனர்.
 குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில்.17-04-2024. இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
 குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் இன்றையதினம் அதிகாலை தனது தொழில் நிமித்தம் வவுனியா
 தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் தனது
 குழந்தையுடன் சென்றார். 
 இவ்வாறு சென்று கொண்டிருந்தவேளை வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி 
அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
 இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பானா அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
 மேலும், சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் காய்கறிகள் ஓரளவு அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
வழங்கப்படும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் மாவு மற்றும் சீனியும் காலாவதியாகவும் காணப்படுகின்றன. 
 சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் உணவுக்கு தகுதியற்ற மீன்களுடன் உணவை வழங்குகின்றன.
 இது குறித்து பல ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முடிவெடுக்கப்பட வேண்டும் 
எனவும் வைத்தியசாலை அதிகாரிகளால் எதுவும் செய்ய 
முடியாது எனவும் வைத்தியர் பெல்லன தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 15 ஏப்ரல், 2024

யாழில் மீண்டும் பரவும் கொரோனாத் தொற்று: பெண் ஒருவர் மரணம்

மீண்டும் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் பெண்ணொருவர் 
உயிரிழந்துள்ளார்.
 பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
 இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி 
கடந்த 12-06-2024.வெள்ளிக்கிழமை  
உயிரிழந்துள்ளார்.
 உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில் மின்னல் தாக்கம் பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய
 மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 


சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் கரையோர ரயில் சேவை தாமதமாகும் என அறிவிப்பு

நாட்டில் கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
தெற்கு களுத்துறை ரயில் தடம் புரண்டதன்
 காரணமாக
 இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>