siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

யாழ் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்
 வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு
 மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு 
திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி
 சென்று , கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை
 செய்துள்ளதுடன் , மனைவியை வீதியில் இறக்கி விட்டு
 சென்று இருந்தனர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த
 நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது 
செய்யப்பட்டுளளார்.
 கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் 
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது


வியாழன், 25 ஏப்ரல், 2024

வெப்பமான காலநிலையால் தாய்லாந்தில் முப்பது பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் 
கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஷ
நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த
 பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம்

 

தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



 

புதன், 24 ஏப்ரல், 2024

எச்சரிக்கை காட்டுத்தீ அபாயத்தில் கனடா: பெடரல் அரசு விடுத்துள்ளன

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் 
அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள 
வானிலை ஆராய்ச்சி 
மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர 
அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேற்கு கெலோனா நகரில் வீடுகளை அழித்து பெரும் சேதத்தையும் மக்களுக்கு கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 
அப்போது, கண்ணுக்கு முன்னே, காட்டுத்தீயில் வீடு பற்றி எரிவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணீருடன் மக்கள் நின்ற காட்சிகள் பல வெளியாகின.
இந்நிலையில், இந்த இளவேனிற்காலம் மற்றும் கோடையிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு மீண்டும் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தெற்கு கியூபெக், கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கனடா முதலான பல பகுதிகள் ஏப்ரல் மாதத்தில் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. அந்த அபாயம், மே மாதத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர கால ஆயத்தங்கள் துறை அமைச்சரான Harjit Sajjan இது குறித்துக் கூறும்போது, கோடை எப்படி இருக்கும் என்பதை 
கணிக்க இயலாத நிலை இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மோசமாகிக்கொண்டே செல்வதால், கனடாவுக்கு காட்டுத்தீ
 பெரும் சவாலாக இருக்கும் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடிகிறது, காட்டுத்தீயால் கனேடியர்களுக்கு ஏற்படும் பண இழப்பும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது 




செவ்வாய், 23 ஏப்ரல், 2024

நாட்டில் எரிவாயு விலை குறைப்பு சாத்தியமா முதித பீரிஸ் வெளியிட்ட தகவல்

நாட்டில் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 
குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் 
தெரிவித்தார். 
 அதற்கிணங்க, இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 22 ஏப்ரல், 2024

நாட்டில் பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம்

நாட்டில் பண்டாரகம கலனிகம நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 
சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 
அவர் 05 அடி 4 அங்குல உயரம் கொண்ட உயரமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் நீல நிற ஸ்லீவ்லெஸ் சட்டை  அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நாட்டில் எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து மூவர் பலி

 நாட்டில் எல்பிட்டிய – அவிட்டாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.  
முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்தனர். 
இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும் ஏழு வயது பேத்தியும் உயிரிழந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


 

சனி, 20 ஏப்ரல், 2024

நாட்டில் ரம்பே பகுதியில் மோட்டார் சைக்கள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் ரம்பே - மல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.  
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்து 19-04-2024.அன்று  இரவு இடம்பெற்றுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.  
விபத்தில் சாரதியும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் கலதன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவராவார். காயமடைந்த மற்ற நபர்மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது